×

காவிரி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது… ஐந்து மாநில தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கள்ளக்குறிச்சி: லடாக்கில் நடைபெற்ற மாவட்ட கவுன்சில் தேர்தலில் தோல்வி அடைந்ததை போல ஐந்து மாநில தேர்தல்களிலும் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன் காவிரி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும், மக்களை குழப்பும் பாஜக-வை விரட்டுவதற்காகவே I.N.D.I.A. கூட்டணி உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

லடாக்கில் நடைபெற்ற மாவட்ட கவுன்சில் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததை சுட்டி காட்டிய அவர் 5 நாள் தேர்தல் முடிவுக்கு பின் பாஜக-வின் தோல்வியை நாடே கொண்டாட உள்ளதாக தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தண்ணீரை திறக்க கூடாது என்று கர்நாடகாவில் ஆர்ப்பாட்டம் செய்யும் பாஜக காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை போடவில்லை என்று கூறி தமிழகத்தில் நாடகம் ஆடுவதாக அவர் கூறினார். ஒன்றிய அரசு இதுபோன்ற புதிய அறிவிப்புகளை வெளியிட்டாலும் அவற்றை நம்பி பாஜக-விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை என்றும் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

The post காவிரி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது… ஐந்து மாநில தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Cauvery ,K. Balakrishnan ,Kallakurichi ,council ,Ladakh ,
× RELATED அரசியல் ஆதாயத்துக்காக பாரத ரத்னா...