×

நிலக்கோட்டை அருகே தொழிலாளி வெட்டி படுகொலை: 6 பேர் கும்பல் கொடூரம்

 

நிலக்கோட்டை, அக்.11: திண்டுக்கல் அருகே வேடபட்டியைச் சேர்ந்தவர் அழகர் (50). இவர் நிலக்கோட்டை-செம்பட்டி சாலையிலுள்ள அரசு மருத்துவமனை எதிரே பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் உணவு இடைவேலையின் போது இரண்டு மோட்டார் சைக்கில்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் உணவருந்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அழகரை சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விரைந்து வந்த நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் குருவெங்கட் தலைமையிலான போலீசார் அழகரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து படுகொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்,

உயிரிழந்த அழகர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் ,எனவே அவர் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலக்கோட்டையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அரசு மருத்துவமனை எதிரே பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நிலக்கோட்டை அருகே தொழிலாளி வெட்டி படுகொலை: 6 பேர் கும்பல் கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Alagar ,Vedapatti ,Dindigul ,Nilakottai-Sembatti road ,
× RELATED நிலக்கோட்டை சக்கையநாயக்கனூரில்...