×

மேயர் நேரில் ஆய்வு கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு

திருச்சி: கர்நாடக அரசை கண்டித்து திமுக விவசாய அணி சார்பில் இன்று நடைபெறும் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாநகர செயலாளர் மு.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சையில் கடந்த 7ம் தேதி காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நம்மை விமர்சனம் செய்தும், நமக்கு துரோகம் விளைவித்திடும் வகையில் செயல்படும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசும் – கர்நாடகத்தில் உள்ள ஒரு சில அமைப்புகளும் விமர்சனம் செய்வதை கண்டிக்கும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாத்திடவும் – சம்பா சாகுபடி துவங்கிட ஏதுவாக உடனே காவிரியில் மாத வாரியாக வழங்கிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சியில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

The post மேயர் நேரில் ஆய்வு கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,DMK ,Karnataka government ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...