×

பேராவூரணி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி

பேராவூரணி: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பு பாடமாக யோகா உள்ளது. இதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமிற்க்கு கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி தலைமை வகித்தார். யோகா பயிற்றுநர் விஜயநிர்மலா வரவேற்றார். தஞ்சாவூர் மனவளக்கலை பேராசிரியர் பூரணச்சந்திரன் மாணவர்களுக்கு மனநலன், உடல் நலன் பேணுதல் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சியில்மனவளக்கலை மன்ற பொறுப்பாளர் வீரசிங்கம், வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் பழனிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பேராவூரணி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Beravurani Government College ,Peravoorani ,Kayakalpa ,Peravoorani Government Arts and Science College ,Peravoorani Govt ,Peravoorani Government College ,Dinakaran ,
× RELATED 3 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்