×

கல்குவாரியில் ரூ. 8.45 லட்சம் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுப்பு

சங்ககிரி: சங்ககிரி அருகே அனுமதியின்றி கல்குவாரியில் ரூ. 8.45 லட்சம் மதிப்பிலான 2,281 டன் சுண்ணாம்பு கற்கள் வெட்டியெடுத்த மாஜி குத்தகைதாரர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்த அன்னதானப்பட்டி கிராமம் பூதாளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அதே பகுதியில் 3.5 ஏக்கர் நிலத்தில், சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க, கடந்த 1996 செப்டம்பர் 20ம்தேதி முதல் 2016 செப்டம்பர் 19ம் தேதி வரை 20 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் பெற்றிருந்தார். இந்நிலையில், வெங்கடாசலம் தொடர்ந்து அனுமதியின்றி சுண்ணாம்பு கற்களை வெட்டி எடுப்பதாக, சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து கடந்த ஜூலை 7ம்தேதி, சேலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர், பூதாளக்குட்டை பகுதியில் நேரில் தணிக்கை மேற்கொண்டார். அப்போது, அனுமதியின்றி குத்தகை பரப்பிற்கு உள்ளேயும், வெளியேயும் சுரங்கப்பணி மேற்கொள்ளப்பட்டு, வெட்டி எடுக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் கனிமத்தை டிஜிபிஎஸ் மூலம் அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டதில் உரிய நடைசீட்டு அனுமதியின்றி 816.04 டன் சுண்ணாம்பு கற்களும், மற்றும் குத்தகை பரப்பிற்கு வெளியே 1.465.62 டன் என மொத்தம் 2281.66 டன் சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது.

The post கல்குவாரியில் ரூ. 8.45 லட்சம் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுப்பு appeared first on Dinakaran.

Tags : Calquary ,Sangakiri ,Kalquari ,Dinakaran ,
× RELATED என்னுடையது விஸ்வரூப வெற்றி!