×

சனாதனத்தை தான் ஏற்க மாட்டோம் இந்துக்களை நாங்கள் முழுவதுமாக ஏற்றுக்கொள்வோம்: வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

பேரவையில் நேற்று 2023-24ம் ஆண்டு கூடுதல் செலவினத்துக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு கோவை தெற்கு தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன்(பாஜக) பேசியதாவது: கோவை தெற்குத் தொகுதியிலே காந்திபுரம் மேம்பாலம் பகுதியிலே இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கண்ணனூர் மாரியம்மன் கோயிலை மேம்பாலத்திற்காக அந்த மக்கள் விட்டுக் கொடுத்தார்கள், இடித்தார்கள். இதுவரைக்கும் அந்தக் கோயில் அங்கு கட்டப்படவில்லை. அமைச்சர் சேகர்பாபு: ஒரு மனிதனுக்கு ஷஷ்டியப்த பூர்த்தி பூஜை என்பது 60 ஆண்டுகள் நிறைந்து, தெய்வ நம்பிக்கை இருப்பவர்கள் வழிபடுவது. இது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அதற்காக நீங்கள் சொல்கின்ற சனாதனத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்பது அல்ல. நாங்கள் இந்துக்களை ஏற்றுக்கொள்கிறோம். இந்து கடவுள்களை ஏற்றுக்கொள்கிறோம். இந்துக்கள் வழிபடுகின்ற ஆலயங்களை மேம்படுத்தித் தருகின்றோம்.

ஆகவே, நாங்கள் ஷஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்ததால், நீங்கள் மறுக்கின்ற பெண் கல்வி உரிமையை எந்நாளும் எதிர்ப்போம். உடன்கட்டை ஏறுதலை எந்நாளும் எதிர்ப்போம். நீங்கள் ஏற்றுக்கொள்கின்ற குலக் கல்வியை எந்நாளும் எதிர்ப்போம். ஆனால், இந்துக்களை நாங்கள் முழுவதுமாக ஏற்றுக் கொள்வோம். உங்களுடைய கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. தகுந்த இடம் கிடைத்தவுடன், திருக்கோயிலை மீண்டும் கட்டி தருவதற்குண்டான நடவடிக்கையை நிச்சயம் இந்து சமய அறநிலையத் துறை எடுக்கும்.

The post சனாதனத்தை தான் ஏற்க மாட்டோம் இந்துக்களை நாங்கள் முழுவதுமாக ஏற்றுக்கொள்வோம்: வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் appeared first on Dinakaran.

Tags : Hindus ,Minister ,Shekharbabu ,Vanathi Srinivasan ,Coimbatore ,Sanatana ,
× RELATED கைம்பெண் செங்கோல் வாங்கக் கூடாது என்பதா?: ஐகோர்ட் கிளை கண்டனம்