×

வருமான வரி கணக்கு 35 லட்சம் ரீபண்ட்கள் வழங்கப்படவில்லை: சிபிடிடி தலைவர் தகவல்

புதுடெல்லி: மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவர் நிதின் குப்தா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் விரைவாக ரீபண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், சில காரணங்களால் 35 லட்சம் ரீபண்ட்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உதாரணமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்த சிலர் சமர்ப்பித்த வங்கிக் கணக்கு விவரங்கள் சரியானதாக இல்லை. சில பொதுத்துறை வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டு விட்டதால், அவற்றின் ஐஎப்எஸ்சி குறியீடுகளும் மாற்றப்பட்டு விட்டன. இதனால் ரீபண்ட் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிலர் சமர்ப்பித்த விவரங்கள் முரண்பாடாக உள்ளன. இதுதொடர்பாக வரி செலுத்துவோருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கணக்கு தாக்கல் செய்வதற்கு முன்பு இவற்றையெல்லாம் சரிபார்த்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு நிதின் குப்தா கூறினார்.

The post வருமான வரி கணக்கு 35 லட்சம் ரீபண்ட்கள் வழங்கப்படவில்லை: சிபிடிடி தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : CPDT ,New Delhi ,Central Board of Direct Taxes ,CBDT ,Nitin Gupta ,
× RELATED வரிச்சலுகை பெறுவதற்கு ஆப்பு வீட்டு...