×

தூத்துக்குடியில் மாமியார் வீட்டிலேயே கொள்ளையடித்த மருமகள்: ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்ததால் கைவரிசை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்ததால் மாமியார் வீட்டிலேயே 56 சவரன் நகையை கொள்ளையடித்த மருமகளை போலீசார் கைது செய்தனர். முத்தையாபுரம் தவசிபெருமாள் சாலை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் அற்புதராஜ். இவர் சொந்தமாக பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி பெயர் செல்வராணி. இவர்களுக்கு தங்கதுரை, ஜான் செல்வசீனி என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். 2 மகன்களுக்குமே திருமணமாகிவிட்டது. தங்கதுரையின் மனைவி பெயர் அஸ்வினி இவருக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தங்கதுரை குடும்பத்தினர் சென்னையிலும், ஜான் செல்வசீனி குடும்பத்தினர் தஞ்சாவூரிலும் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை நேரத்தில் அற்புதராஜ் தான் நடத்திவரும் பேன்சி கடைக்கு சென்று விட்டார். மாலை வேளையில் மாமியார் செல்வராணி, மருமகள் அஸ்வினி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது பர்தா அணிந்து கொண்டு வந்த பெண் ஒருவர் வீட்டில் புகுந்து மருமகள் மற்றும் மாமியாரை கட்டிப்போட்டு கழுத்து, காது மற்றும் பீரோவிலிருந்த நகைகள் என மொத்தம் 62 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதைக்கேட்டு அதிர்ந்து போன அற்புதராஜ், முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணையை துவக்கினர். அந்த பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். கொள்ளையடித்த 2 மர்நபர்களும், தூத்துக்குடிக்கு சென்ற பஸ்சில் ஏறி தப்பி சென்றது தெரிய வந்தது. இதனால், அந்த மர்மநபர்கள் யார் என்ற அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் விரிவுபடுத்தினார்கள்.

மேலும் மருமகள் அஸ்வினியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மருமகள் அஸ்வினிதான் இதற்கெல்லாம் காரணமாக இருந்திருக்கிறார். சென்னையில் கணவருடன் வசித்து வந்த பொழுது அஸ்வினி ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் சொந்த நகையை அடமானம் வைத்து ஆன்லைன் டிரேடிங் செய்துள்ளார். இந்த இழப்புகள் குறித்து வீட்டில் யாரிடமும் எதையும் சொல்லாமல் மறைத்துள்ளார்.

ஆனால் அவை லாஸில் முடிந்துள்ளது. நகை எங்கே என கணவர் கேட்கும் பொழுது ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழித்து வந்துள்ளார். இந்த நிலையில் நகையை மீட்பதற்காக பணம் தேவைப்படுவதால் மாமியாரின் நகையையே கொள்ளையடிக்க மருமகள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இவ்வளவையும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து , மருமகள் அஸ்வினி, அவரது சகோதரியை போலீசார் கைது கைது செய்தனர்.

The post தூத்துக்குடியில் மாமியார் வீட்டிலேயே கொள்ளையடித்த மருமகள்: ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்ததால் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Dinakaran ,
× RELATED கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே...