×

ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் தகுதியுள்ள 49 சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவர்: கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் தகுதியுள்ள 49 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 36 இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பான 1 கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார். 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் 36 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்கிறது. உடல்நலம், மனநலம் குன்றிய சிறைவாசிகள், வயது மூப்பு சிறைவாசிகளை விடுவிப்பது தொடர்பாக நீதிபதி தலைமையில் அரசு குழு அமைத்துள்ளது. தகுதியுள்ள 49 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவர் என தெரிவித்தார்.

The post ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் தகுதியுள்ள 49 சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவர்: கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Governor ,Chief Minister ,MK Stalin ,Chennai ,M.K.Stalin ,M.K.Stal ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...