×

சில்லி பாயின்ட்…

* காயத்தால் அவதிப்பட்டு வரும் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், நேற்று நெதர்லாந்துக்கு எதிராக நடந்த போட்டியிலும் களமிறங்கவில்லை. எனினும், அடுத்து வங்கதேச அணியுடன் சென்னையில் அக்.13ம் தேதி நடக்க உள்ள லீக் ஆட்டத்தில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பகிஸ்தான் அணியுடன் இன்று மோதவுள்ள இலங்கை அணியில், காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷனா களமிறங்குவார் என துணை பயிற்சியாளர் நவீத் நவாஸ்
தெரிவித்துள்ளார்.

* அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் அக். 14ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த பரபரப்பான போட்டியை பார்த்து ரசிக்கும் வகையில் ரசிகர்களுக்கு கூடுதலாக 14,000 டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் ஆன்லைனில் இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன.

* உலக கோப்பையையொட்டி இந்தியா வந்த ஐசிசி டிஜிட்டல் மீடியா தொகுப்பாளினி ஜைனப் அப்பாஸ் (பாகிஸ்தான்), சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே இந்தியாவை விமர்சித்து பல்வேறு கருத்துகளை பதிவு செய்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், அவர் ‘சொந்த காரணங்களுக்காக’ இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ‘உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தவித பலவீனமும் இல்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவோம்’ என ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Kane Williamson ,Netherlands ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பையில் அசத்தல்;...