×

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் 8வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் 8வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதியில் மோயர் பாயிண்ட் அருகே தொப்பி தூக்கும் பாறை, பேரிஜம் ஏரியின் கழுகுப்பார்வை பகுதி, அமைதி பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன.

இவற்றில் பேரிஜம் ஏரி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இப்பகுதியை பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகள் வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் இப்பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் 8வது நாளாக தடை விதித்துள்ளனர்.மேலும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் 8வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Parijam lake ,Kodaikanal Barijam lake ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தற்காலிக தடை..!!