×

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

துறையூர்: துறையூர் அருகேயுள்ள பெருமாள்பாளையம் கிராமத்தில் காட்டுக்கொட்டகை பகுதியில் விசிப்பவர் வரதராஜன் மகன் கிருஷ்ணன்(42). விவசாயி. நேற்று அவர் குடியிருக்கும் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அப்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி சரி செய்ய முயன்றபோது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக உறவினர்கள் கிருஷ்ணனை துறையூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை மருத்துவர் பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். தகவலறிந்த துறையூர் போலீசார் கிருஷ்ணனின் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மின்சாரம் தாக்கி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Dharayur ,Varadarajan ,Krishnan ,Kattukottakai ,Perumalpalayam ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி அருகே பெண்ணுக்கு...