×

பக்கத்து வீட்டில் நகை திருடிய பெண் கைது

 

ஊட்டி,அக்.9: நீலகிரி மாவட்டம் ஊட்டி ஸ்டோன் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் கிரிஜா தேவி. இவர் கடந்த 30ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து தன்னுடைய 5 பவுன் நகையை கழற்றி பீரோவில் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவில் இருந்த நகையை எடுக்க சென்றார். ஆனால் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கிரிஜாதேவி வீடு முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் நகை கிடைக்கவில்லை. நகை திருடு போய் இருக்கலாம் என்று எண்ணிய கிரிஜா தேவி இதுகுறித்து ஊட்டி பி1 காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த சுசீலா(35) என்பவர் கிரிஜா தேவி வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுசிலாவிடம் விசாரணை நடத்தியதில் அதிக கடன் உள்ளதால் கடனை அடைக்க நகையை திருடியதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக சுசிலாவிடம் இருந்த நகை மீட்கப்பட்டது.

The post பக்கத்து வீட்டில் நகை திருடிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Girija Devi ,Stone House ,Ooty, Nilgiris district ,
× RELATED ஊட்டி நகராட்சி அணைகளில் தண்ணீர்...