×

ராகு, கேது பெயர்ச்சி விழா

சேலம்:சேலம் தாதுபாய்குட்டையில் உள்ள ஓம்சக்தி வேம்பரசர் விநாயகர் கோயிலில் சனி பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சியின் போது சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நவகிரக வழிபாடு நடத்தப்படுகிறது.இதன்படி நேற்று, ராகு, கேது பெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு வழிப்பாடு நடந்தது. ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி ராகு, கேது பகவான் பரிகார பூஜைகள், காலை 9 மணிக்கு துவங்கி நடந்தது. இதில், ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடத்தப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post ராகு, கேது பெயர்ச்சி விழா appeared first on Dinakaran.

Tags : Rahu and Ketu ,Salem ,Saturn ,Rahu ,Ketu ,Omshakti Vembarasar Vinayagar ,Dadubhaikuttai ,Rahu, Ketu ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்