×

ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு பெரம்பலூர் கோயில்களில் சிறப்பு பரிகார பூஜை

பெரம்பலூர்:பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையில் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று (8ம் தேதி) ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு மதியம் 2.30 மணி அளவில் நவகிரக மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ராகு கேது மற்றும் அனைத்து கிரக மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் 3:39 மணி அளவில் மகா தீபாராதனை காண் பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவிந் தராஜன் மற்றும் தர்ம பரிபாலன சங்கத்தார் செய்திருந்தனர். விழாவில் சாமி இளங்கோவன், முன்னாள் அறங் காவலர் வைத்தீஸ்வரன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு பெரம்பலூர் கோயில்களில் சிறப்பு பரிகார பூஜை appeared first on Dinakaran.

Tags : Parikara Pooja ,Perambalur ,Rahu-Ketu ,Akilandeswari Sametha Brahmapureeswarar temple ,Sharayur Road ,Rahu ,Ketu ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி