×

அறிஞர் அண்ணா நினைவு மாரத்தான் போட்டி

 

கோவை, அக். 8: கோவையில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நினைவு மாரத்தான் போட்டியில் கலெக்டர், கமிஷனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில், அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியானது (மாரத்தான்) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் நேற்று காலை 6 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

நேரு ஸ்டேடியம் தமிழ்நாடு விளையாட்டு ஆணைய அலுவலகம் முன்பு துவங்கிய இப்போட்டியை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், துணைமேயர் வெற்றி செல்வன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.இதில், கலந்து கொண்டவர்கள் எல்ஐசி அண்ணா சிலை வழியாக சென்று மீண்டும் நேரு விளையாட்டு அரங்கை வந்தடைந்தனர்.

17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோமீட்டர், பெண்களுக்கு 5 கிலோமீட்டர், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் என இப்போட்டி நடத்தப்பட்டது. முதல் பரிசாக 5000 ரூபாய், 2-ம் பரிசாக 3000 ரூபாய், 3-ம் பரிசாக 2000 ரூபாய், நான்கு முதல் பத்து இடங்களில் வந்தவர்களுக்கு தலா 1000 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் போட்டியாளர்களுடன் இணைந்து ஓடினர்.

The post அறிஞர் அண்ணா நினைவு மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.

Tags : Arignar Anna Memorial Marathon Competition ,Coimbatore ,Arian Anna Memorial Marathon ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்