×

சந்திரபாபுநாயுடு கைதை கண்டித்து ஆற்று வெள்ளத்தில் இறங்கி தெலுங்குதேசம் கட்சி பூஜை


திருமலை: முன்னாள் முதல்வர் சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆற்றில் வெள்ளத்தில் நின்றபடி பூஜை செய்து நூதன போராட்டம் நடத்தினர்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கொள்ளு ரவீந்திரா, தேவிநேனி உமாமகேஸ்வர ராவ், மாநில பிசி பிரிவு தலைவர்கள் நேற்று ஜல தீட்சை மேற்கொண்டனர். அதன்படி ஆற்றில் தண்ணீரில் இறங்கி நின்று பூஜை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கொல்லு ரவீந்திரா பேசியதாவது: நாட்டின் தலைசிறந்தவர்களில் ஒருவரான சந்திரபாபுவை சட்ட விரோதமாக கைது செய்து சிறையில் அடைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் சந்திரபாபு தலைமையிலான அரசு அமைந்தால் மட்டுமே மாநிலம் வளர்ச்சி பெறும் என மக்கள் நம்புவதால் ஆளும் கட்சியினரால் பொறுத்துகொள்ள முடியாமல் சந்திரபாபு மீது பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

The post சந்திரபாபுநாயுடு கைதை கண்டித்து ஆற்று வெள்ளத்தில் இறங்கி தெலுங்குதேசம் கட்சி பூஜை appeared first on Dinakaran.

Tags : Telugu Desam ,Chandrababu Naidu ,Tirumala ,Telugu Desam Party ,Chief Minister ,Chandrababu ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,...