×

திருமலை திருக்கல்யாணம் சிறப்பு வழிபாடு

மோகனூர்: மோகனூர் காவிரி ஆற்றின் வடகரையில், பிரசித்திபெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், திருமலையில் ஒருநாள் வைபவம் கோலாகலமாக நடப்பது வழக்கம். அன்றைய தினம், திருமலையில்(திருப்பதி) பெருமாளுக்கு அதிகாலை முதல் இரவு வரை நடக்கும் சிறப்பு தரிசன பூஜை போல், கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அதன்படி, நாளை(8ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோ தரிசனம், 6 மணிக்கு நவநீதி ஆர்த்தி, 7 மணிக்கு தோமாலை சேவை, அர்ச்சனை சேவை நடக்கிறது. தொடர்ந்து, வாரி சர்வ தரிசனம், உற்சவர் விசேஷ திருமஞ்சன சேவை, மாலை 4 மணிக்கு திருக்கல்யாணம், 6 மணிக்கு வாகன சேவை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை பூஜை நடைபெறும். அன்றைய தினம் இரவு, ஒரு நாள் பள்ளியறையில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை, அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, செயல் அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் சுந்தர் ஆகியோர் செய்துள்ளனர்.

The post திருமலை திருக்கல்யாணம் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Thirukalyanam ,Mohanur ,Cauvery ,Kalyana Prasanna Venkatramana Swamy Temple ,Tirumala Thirukalyanam ,
× RELATED உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி –...