×

பொறுப்பேற்பு கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கீழ்வேளூர்: பயிர் காப்பீட்டு நிறுவனத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவராணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எம். அபூபக்கர் தலைமை வகித்தார். கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் பாண்டியன்,அம்பிகாபதி, துரைராஜ், சிவகுமார், வடக்கு தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், தோழர்கள் மாதர் சங்கத் தோழர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கையை விளக்கி மாவட்ட செயலாளரும், நாகப்பட்டினம் முன்னாள் எம்எல்ஏவுமான மாரிமுத்து பேசினார்.

The post பொறுப்பேற்பு கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist-Communist Demonstration ,Kilvellur ,Kuruvai ,Marxist ,Communist ,Dinakaran ,
× RELATED கீழ்வேளூர் தாலுகாவில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம்