×

கலைஞர் நூற்றாண்டு விழா 1,000 மரக்கன்று நடும் நிகழ்ச்சி

வேதாரண்யம்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தலைஞாயிறு ஒன்றியம் வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்நடைபெற்றது. சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி மற்றும் ஒன்றிய திமுக செயலாளர் மகாகுமார், சதாசிவம், நகர் மன்றத் தலைவர்கள் புகழேந்தி மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் ராஜா, துணைத்தலைவர் அசோக்குமார், துணை அமைப்பாளர்கள், அன்புமணி, கார்த்திகேயன், முகுந்தன், திருக்குமரன், பாலா, ஆண்டிச்சாமி, பார்த்திபன், பாரதி அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பை, மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கப்பட்டது.

The post கலைஞர் நூற்றாண்டு விழா 1,000 மரக்கன்று நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்