×

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தமிழ் ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்

சென்னை: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் ஆய்வாளர் ஒரிசா பாலு நேற்று காலமானார். திருச்சி, உறையூரில் 1963ல் பிறந்தவர் ஒரிசா பாலு (எ) சிவ சுப்பிரமணி (60). இயற்பியலில் தேர்ச்சி பெற்று சுரங்கம் மற்றும் வெளிநாட்டு கருவிகளை பழுது பார்க்கும் வேலைகள் தொடர்பான பொறியியல் துறையில் பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்து அங்கு இருந்து இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர். பண்டைய கால தமிழர்களின் கடல் அறிவை உலகுக்கு வெளிப்படுத்திய கடல்வழி ஆராய்ச்சியாளர, தமிழ்சார் ஆய்வாளர். வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது இயற்பெயர் சிவஞானம் பாலசுப்பிரமணி. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து
வருகின்றனர்.

The post உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தமிழ் ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார் appeared first on Dinakaran.

Tags : Orisa Balu ,Chennai ,Trichy ,
× RELATED திருச்சி – சென்னை தேசிய...