×

மிசோரம் எல்எல்ஏ கே.பெய்ச்சுவா ராஜினாமா

அய்ஸ்வால்: மிசோரம் சட்டப்பேரவை உறுப்பினர் பெய்ச்சுவா தன் பதவியை ராஜினாமா செய்தார். வடகிழக்கு மாநிலமான மிசோரமில் தற்போது சோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி செய்து வருகிறது. இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் இங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தன் சொந்த தொகுதியான சியாஹாவில் பாஜ சார்பில் போட்டியிட பெய்ச்சுவா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. இதையடுத்து கே.பெய்ச்சுவா தன் பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

The post மிசோரம் எல்எல்ஏ கே.பெய்ச்சுவா ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Mizoram ,K. Baichua ,Mizoram Legislative Assembly ,Baichua ,Soram Thanga ,Mizoram LLA K. Baichua ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...