×

காவிரியில் தண்ணீரும் இல்லை; மணலும் இல்லை… மணல் கொள்ளையால் உயிரிழப்புகள் நடைபெறுவதாக ஐகோர்ட் கிளை வேதனை

மதுரை: காவிரியில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார். 2019ல் அரவக்குறிச்சி காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி இறந்த 3 மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. அரவக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மணல் கொள்ளையால் உயிரிழப்புகள் நடைபெறுவதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கின் மனுவில்; அரவக்குறிச்சி ஆவுடையார் பாலம் ஆற்றில் புனிதநீர் எடுக்க சென்ற எனது மகன் பிரபாகரன் உட்பட 3பேர் நீரில் மூழ்கி பலியாகினர். காவிரி ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் உமிரிழப்பு அடிக்கடி ஏற்படுகிறது. காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரிகள் அமைக்கப்படுவதாலும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது. இறந்த மாணவர்களுக்கு இழப்பீடு கோரி 2020-ல் வழக்கு தொடரப்பட்டு, தலா ரூ.25 லட்சம் இழப்பீடுதர கோர்ட் உத்தரவிட்டது. உத்தரவுப்படி இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை; விரைந்து இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது; காவிரியில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். காவிரி ஆறு மோசமான நிலையில் உள்ளது; பொன்னியின் செல்வன் கதையில் வரும் காவிரி போல உள்ளதாக பலர் நினைக்கின்றனர். 2020-ம் ஆண்டு தீர்ப்பின்படி இறந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சத்தை 4 மாதத்தில் வழங்க உத்தரவிட்டார். மணல் கொள்ளையால் உயிரிழப்புகள் நடைபெறுவதாக தொடுத்த வழக்கில் காவிரி ஆற்றின் நிலை குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

The post காவிரியில் தண்ணீரும் இல்லை; மணலும் இல்லை… மணல் கொள்ளையால் உயிரிழப்புகள் நடைபெறுவதாக ஐகோர்ட் கிளை வேதனை appeared first on Dinakaran.

Tags : Icourt ,Madurai ,Court ,Judge ,Anand Wengadesh ,Kaviri ,Caviar ,Dinakaraan ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...