×

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழக அரசாணை வெளியீடு.!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு பிளீடர்கள் உள்ளிட்ட 120 வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை  உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜராக சந்திரசேகரன், எ.எட்வின் பிரபாகரன், ஆர் அனிதா, எஸ்.அனிதா, எ.செல்வேந்திரன், யோகேஷ் கண்ணதாசன், ஜி.நன்மாறன், கீதா தாமரை செல்வன்,  எம்.ஷாஜகான், யமுனா தேவி உள்ளிட்ட 23 பேர் சிறப்பு அரசு பிளீடராக நியமிக்கப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.ஜோன் கிறிஸ்டோபர் துரைராஜ், தமிழ்செல்வி, ஜி.கிருஷ்ணராஜா, வி.பி.ஆர்.இளம்பரிதி, வி.நன்மாறன், பி.கணேசன், கே.சுரேந்திரன், ரிச்சர்ட்சன் வில்சன் உள்ளிட்ட 35 பேர் கூடுதல் அரசு பிளீடர்களாக நியமிக்கப்படுகிறார்கள். ஜி.அமேடியஸ், எம்.எஸ்.அரசகுமார், அகிலா ராஜேந்திரன்,சி.ஜெயப்பிரகாஷ், பி.கணேசன், பி.சஞ்சய்காந்தி. ஆர்.நீதி பெருமாள்  உள்ளிட்ட 47 சிவில் பிரிவு அரசு வழக்கறிஞர்களும், எல்.பாஸ்கரன், வினோத்குமார், ஜெ.சுப்பையா உள்ளிட்ட 15 கிரிமினல் வழக்கு பிரிவு வழக்கறிஞர்களும்  நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது….

The post சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழக அரசாணை வெளியீடு.! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Supreme Court of Chennai ,Tamil ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...