×

மினிவேன் டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்தது ஈரோடு பக்தர்கள் 3 பேர் படுகாயம் செங்கம் அருகே விபத்து

செங்கம், அக்.6: செங்கம் அருகே மினிவேன் டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஈரோடு பக்தர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த 23 பக்தர்கள் நேற்று மினிவேனில் மேல்மருவத்தூர் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பாய்ச்சல் கிராமம் வழியாக புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென வேனின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த வேனில் செய்த பக்தர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வேனில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் படுகாயமும், 20 பேர் லேசான காயமும் அடைந்தனர். படுகாயம் அடைந்த பக்தர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், விபத்தில் சிக்கிய மினிவேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். முன்னதாக இந்த விபத்து காரணமாக திருவண்ணாமலை- செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post மினிவேன் டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்தது ஈரோடு பக்தர்கள் 3 பேர் படுகாயம் செங்கம் அருகே விபத்து appeared first on Dinakaran.

Tags : Erode ,Sengam ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் சொத்து வரி பாக்கி...