×

ஜெயங்கொண்டத்தில் டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்

 

ஜெயங்கொண்டம், அக்.6: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கேட்டு சென்னையில் போராடும் இடைநிலை ஆசிரியர்களை விடுதலை செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அக். 13ம் தேதி சென்னையில் நடக்கும் டிட்டோ ஜாக் கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வது என்பதை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்திற்கு பயிற்சிக்கு வந்த ஆசிரியர்கள் இடைவேளை நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி, தமிழக ஆசிரியர் கூட்டணி பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். டிடோ ஜாக் வட்டாரப் பொறுப்பாளர்கள் அரங்கநாதன், ஆறுமுகம், கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மன்ற நிர்வாகி ஜேசுராஜ் அனைவரையும் வரவேற்றார். தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

The post ஜெயங்கொண்டத்தில் டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ditto Jack ,Jayangkond ,Jayangkondam ,Chennai ,Tito Jack ,
× RELATED இலையூர் வாரியங்காவல் அரசு பள்ளியில் மரக்கன்று நடுவிழா