×

கடமலை மயிலை ஒன்றியத்தில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு தீவிர பயிற்சி

 

வருசநாடு, அக். 6: கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, குமணன்தொழு, வருசநாடு, வாலிப்பாறை, தும்மக்குண்டு,பாலூத்து, சிங்கராஜபுரம், உள்ளிட்ட பகுதிகளில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு ஓட்ட பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள மாடுகளுக்கு மதிய நேரங்களில் நீச்சல் பயிற்சியும், காலை, மாலை இருவேளைகளில் மாடுகளுக்கு பிண்ணாக்கு, பருத்திப்பால், மூலிகைபால், பேரிச்சைப்பழம், வடிகஞ்சி, வாழைப்பழம், சத்துணவு மாவு உள்ளிட்ட அனைத்து வகையான உணவுகளை மாடுகளுக்கு விவசாயிகள் அளித்து வருகின்றனர்.

இதனால் மாடுகளுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது. இந்நிலையில் பங்குனி உத்திரம் சித்திரை திருவிழா உள்ளிட்ட திருவிழாக்களில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு ஓட்டப் பந்தயம் வைப்பது வழக்கம். இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையறிந்து மாட்டு வியாபாரிகள் தமிழகத்தில் இருந்து அதிக அளவில் மாடுகள் வாங்க வருசநாடு பகுதிக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கடமலை மயிலை ஒன்றியத்தில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு தீவிர பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Rekla ,Kadamalai Peacock Union ,Varusanadu ,Kadamalaikundu ,Mayiladumparai ,Kumanantholu ,Valiparai ,Tummakundu ,Singarajapuram ,Dinakaran ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்