×

கர்நாடக திறந்தநிலை பல்கலை நிதி ரூ.300 கோடி கையாடல்: சிபிஐ வழக்குப்பதிவு

பெங்களூரு: மைசூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என பல்வேறு கிளை கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகத்தின் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண தொகைகளும் பல்கலைக்கழக வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், 2013-2014 மற்றும் 2014-2015 ஆகிய கல்வியாண்டுகளில் செலுத்தப்பட்ட தொகையில் ரூ.50 கோடி காணாமல் போயுள்ளது. அதேபோல, 2009-2010 கல்வியாண்டு முதல் 2012-2013 கல்வியாண்டு வரை மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் ரூ.250 கோடி காணவில்லை என்று சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

பெரிய தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்த பல்கலைக்கழக போர்டு இயக்குநர்கள் சிபிஐயிடம் புகார் அளித்தது. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழக பணத்தை கையாடல் செய்து தவறாக பயன்படுத்தியவர்களை கண்டுபிடிக்குமாறு சிபிஐக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

The post கர்நாடக திறந்தநிலை பல்கலை நிதி ரூ.300 கோடி கையாடல்: சிபிஐ வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Karnataka Open University Fund ,CBI ,Bengaluru ,Karnataka State Open University ,Mysuru ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...