×

கபசுர குடிநீர் வழங்கல்

வத்தலக்குண்டு, அக்.5: வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி பசுமை வதிலை இயக்கம் சார்பில் பயணிகளுக்கு கபசுர குடிநீர், மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. இயக்க தலைவர் மருதராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சிதம்பரம், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தொகுதி ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கோபால், இயக்க செயலாளர் செல்வபாண்டி, பொருளாளர் ராஜா முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கேபி முருகன் பயணிகளுக்கு கபசுர குடிநீர், மரக்கன்றுகளை வழங்கினார். இயக்க துணை தலைவர் தங்கராஜ் நன்றி கூறினார்.

The post கபசுர குடிநீர் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Kapasura ,Wattalakundu ,Gandhi ,Jayanti ,Vatthalakundu bus station ,Green Vatila movement ,Dinakaran ,
× RELATED மாணவர்கள் செல்லும் வாகனங்கள் சோதனை 3 ஆட்டோக்கள், வேன் பறிமுதல்