×

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: நாசே.ராமசந்திரன் அரசுக்கு கோரிக்கை

சென்னை: பீகாரை போல தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் நாசே.ராமசந்திரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீகாரில் அம்மாநில அரசின் மூலம் சாதிவாரியான மக்க தொகை கணக்கெடுக்கப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு யாதவ மகாசபை வரவேற்கிறது. இந்த கணக்கெடுப்பில் மொத்த மக்கள் தொகையான 13 கோடியில், அதிக எண்ணிக்கையில் உள்ளதாக யாதவ சாதியினை சேர்ந்தவர்களாக 1.86 கோடி (14.26%) என்று அறியப்பட்டுள்ளது. அதேபோல, இந்திய நாட்டிலேயே சமூக நீதிக்கு அடித்தளமாக விளங்குகிற தமிழகத்தை ஆட்சி செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பினை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: நாசே.ராமசந்திரன் அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nase ,Ramachandran ,Chennai ,Tamil Nadu ,Yadava Maha Sabha ,Bihar ,Nase Ramachandran ,
× RELATED ரூ32,000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர்கள் கைது