×

கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் மட்டுமே பேசுவார்: செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அரசியல் கருத்துக்களை ஊடகத்தில் தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்னை, தொகுதி பிரச்னைகளை மட்டுமே ஊடகத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே கூட்டணி குறித்தும், அரசியல் கருத்துக்கள் குறித்தும் பேசுவார். அதிமுகவின் நிலைப்பாட்டுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

The post கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் மட்டுமே பேசுவார்: செல்லூர் ராஜூ பேட்டி appeared first on Dinakaran.

Tags : General Secretary ,Sellur Raju ,Madurai ,AIADMK ,
× RELATED சொல்லிட்டாங்க…