×

மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 22 ஆண்டு சிறை வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பு நெமிலி அருகே

வேலூர், அக்.4: நெமிலி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே பெருவளையம் பகுதி கல்பனாம்பட்டு கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் என்ற ராஜன் (46), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஜெயக்குமார் அங்கு இருந்த மாணவியிடம் பள்ளியில் கொண்டு சென்று விடுவதாக கூறி, சிறுமியை தனது பைக்கில் அமர வைத்து அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்குள்ள ஏரிப்பகுதிக்கு அழைத்துச் சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்று மிரட்டி உள்ளார். இதனால் சிறுமியும் பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதற்கிடையே சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், பெற்றோர் அவரிடம் கேட்டபோது நடந்ததை சிறுமி அழுது கொண்டே கூறி உள்ளார். இதையடுத்து பெற்றோர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கலைப்பொன்னி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு 22 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனையும், ₹15,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயக்குமாரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

The post மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 22 ஆண்டு சிறை வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பு நெமிலி அருகே appeared first on Dinakaran.

Tags : Vellore POCSO court ,Nemili ,Vellore ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...