×

அமெரிக்காவில் 19 அடி உயர பிரமாண்ட அம்பேத்கர் சிலை: வரும் 14ம் தேதி திறப்புவிழா

வாஷிங்டன்: அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பி பி.ஆர்.அம்பேத்கருக்கு அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 10 அடி உயர பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அம்பேத்கர் மையத்துக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் நிறுவப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய புகழ் பெற்ற சிற்பி ராம் சுதார் இந்த சிலையை வடிவமைத்துள்ளார். இந்த சிலை வரும் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது. ‘சமத்துவத்தின் சிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை வெளிநாட்டில் அமையவுள்ள அம்பேத்கரின் மிகப்பெரிய சிலையாகும். திறப்பு விழாவில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த அம்பேத்கரை பின்பற்றும் ஏராளமானோர் இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

The post அமெரிக்காவில் 19 அடி உயர பிரமாண்ட அம்பேத்கர் சிலை: வரும் 14ம் தேதி திறப்புவிழா appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,America ,Washington ,Maryland, USA ,Dinakaran ,
× RELATED அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்...