×

ஆண்கள் ஹாக்கி அரையிறுதி இந்தியா – கொரியா இன்று பலப்பரீட்சை

ஆசிய விளையாட்டுப் போட்டி ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா – தென் கொரியா அணிகள் இன்று மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா 5 லீக் ஆட்டங்களிலும் அபாரமாக வென்று 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. இந்த 5 ஆட்டங்களில் இந்தியா 58 கோல் அடித்த நிலையில், எதிரணிகளுக்கு வெறும் 5 கோல் மட்டுமே விட்டுக்கொடுத்தது. முதல் அரையிறுதியில், பி பிரிவில் 2வது இடம் பிடித்த தென் கொரியாவுடன் இந்தியா இன்று மோதுகிறது. தென் கொரியா பி பிரிவில் விளையாடிய 5 லீக் ஆட்டங்களில் 4ல் வென்றுள்ளது. 2வது அரையிறுதியில் பி பிரிவில் முதலிடம் பிடித்த சீனா (4 வெற்றி, ஒரு டிரா), ஏ பிரிவில் 2வது இடம் பிடித்த ஜப்பானுடன் (4 வெற்றி, 1 தோல்வி) மோதுகிறது. இறுதிப் போட்டி நாளை மறுநாள் நடைபெறும்.

* இந்திய மகளிரும் முதலிடம் மகளிர் ஹாக்கி ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஹாங்காங்குடன் மோதியது. அதில் இந்தியா 13-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. வந்தனா கட்டாரியா, தீபா ஹாட்ரிக் கோல் அடித்தனர். தீப் கிரேன், சங்கீதா குமாரி தலா 2, மோனிகா, வைஷ்ணவி, நவ்நீத் கவுர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்தியா 3 வெற்றி, ஒரு டிரா செய்து ஏ பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய வீராங்கனைகள் இதுவரை 33 கோல் அடித்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராக ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது. நாளை நடக்கும் முதல் அரையிறுதியில் இந்தியா – சீனா, 2வது அரையிறுதியில் ஜப்பான் – கொரியா மகளிர் அணிகள் மோதுகின்றன.

The post ஆண்கள் ஹாக்கி அரையிறுதி இந்தியா – கொரியா இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : -Final India ,Korea ,India ,South Korea ,Asian Games ,-final ,Korea Test ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு