×

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் தமிழ்நாட்டு வீரர்களுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: ஆசிய விளையாட்டு போட்டிகள்-2023ல் பதக்கம் வென்றவர்களை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023ல் துப்பாக்கி சுடுதல் (ஆடவர் ட்ராப்) பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ள நம் தமிழ்நாட்டை சேர்ந்த ப்ரித்விராஜ் தொண்டைமானுக்கு என் பாராட்டுகள்.

மேலும் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த மற்றுமொரு திறமையாளரான ராம்குமார் ராமநாதனுக்கும் என் வாழ்த்துகள். ஸ்குவாஷ் விளையாட்டில் மகளிர் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டு வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் தமிழ்நாட்டு வீரர்களுக்கு முதல்வர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : CM ,Tamil Nadu ,Asian Games ,Chennai ,Asian Sports Competitions- ,G.K. ,Stalin ,Asian Sports ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இயல்பை விட 83% மழை குறைவு: வானிலை மையம் தகவல்