×

தமிழகத்தில் இயல்பை விட 83% மழை குறைவு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மார்ச் 1 முதல் நேற்று வரை பதிவாக வேண்டிய மழை இயல்பைவிட 83% குறைவாக பெய்துள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பாக 5.4 செ.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 0.9 செ.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது. சென்னையில் மார்ச் 1 முதல் நேற்று வரை 1.5 செ.மீ. மழை செய்ய வேண்டிய நிலையில் மழையே பதிவாகவில்லை. சென்னை, செங்கல்பட்டு உள்பட 17 மாவட்டங்களில் 100% மழை பெய்யவில்லை.

The post தமிழகத்தில் இயல்பை விட 83% மழை குறைவு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் கடல் சீற்றம் இன்றும்...