×

டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் அருகே விருப்பாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா(62). கூலித்தொழிலாளியான இவர், நேற்று டூவீலரில் ராயக்கோட்டை- கெலமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி, கிருஷ்ணப்பா மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிருஷ்ணப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து, டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

The post டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnappa ,Vishakshi Nagar ,Kelamangalam ,Rayakottai-Kelamangalam road ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்