கரூர்:கரூரில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அளித்த பேட்டி: கர்நாடக அரசு நியாயமாக வழங்க கூடிய தண்ணீரையே தர மறுக்கிறது. தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதரத்துக்கு முடிவு கட்டும் வகையில் கர்நாடக அரசின் செயல்பாடு உள்ளது. இதில், அரசியல் பார்க்க கூடாது. பாஜ- அதிமுக கூட்டணி முறிவில் இரண்டு தரப்புக்கும் சமாதான கட்சியாக இருக்கிறோம். அதற்காக, நான் சமாதான தலைவர் எனக்கூறப்படுவது தவறு.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் கட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை உள்ளது. தமாகா நலம் விரும்பி கட்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ளன. தேர்தல் நெருங்கும் போது சரியான நேரத்தில் கூட்டணி குறித்து நாங்கள் முடிவு செய்வோம். எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுத்து பின்னர் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுக-பாஜவுக்கு சமாதான கட்சி தமாகா: ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.