×

பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்கள் மூலம் ரூ.854 கோடி மோசடி: 6 பேர் கைது

பெங்களூரு: குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து ரூ.854 கோடி மோசடி செய்த 6 பேரை நேற்று பெங்களூரு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இணையதளங்களான பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்டவையில் கவர்ச்சியான விளம்பரங்கள் மற்றும் எனக்கு இவ்வளவு லாபம் கிடைத்தது என்ற வீடியோ வெளியிடப்படுகிறது. இது பொய் என்பதை அறியாமல் உண்மை என நம்பும் நபர்களை குறி வைத்து ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ஒருவர் இந்த கும்பலின் ஆசை வார்த்தையை நம்பி ரூ.8.5 லட்சம் வரை படிப்படியாக முதலீடு செய்துள்ளார்.

இதே போல் பெங்களூருவின் பல்வேறு போலீஸ் சரகங்களில் மொத்தம் 17 புகார்கள் பதிவாகி இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த 6 பேர் சிக்கியுள்ளனர். கர்நாடக மாநிலம் முழுவதும் 487 வழக்குகள் பதிவாகியுள்ளன. குஜராத் மாநிலத்தில் இது போன்ற மோசடி வழக்குகள் அதிக அளவாக 642 புகார்களும், உத்தரபிரதேசத்தில் 505 புகார்களும், தெலங்கானாவில் 719 புகார்களும், தமிழ்நாட்டில் 472 புகார்கள் என இந்தியா முழுவதும் 5013 புகார்கள் பதிவாகியுள்ளது. பெங்களூருவில் கைதான 6 பேரிடம் நடந்த விசாரணையில் 84 வங்கி கணக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது என்ற விபரம் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ரூ.854 கோடி மோசடி நடந்துள்ளது என்ற விபரத்தையும் கண்டு பிடித்துள்ளோம். ரூ.5 கோடி பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் தயானந்த் கூறினார்.

* தமிழ்நாட்டிலும் மோசடி
தமிழ்நாட்டிலுள்ள ஒரு வங்கி கணக்கில் இருந்து பெங்களூருவிலுள்ள சுப்பு எண்டர் பிரைசஸ் என்ற பெயரிலுள்ள வங்கி கணக்கிற்கு பணம் வரவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்த வங்கி கணக்கு உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவருக்கே தெரியாமல் அவரின் ஆவணத்தை பயன்படுத்தி இந்த மோசடி கும்பல் வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலம் மக்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றியுள்ளனர்.

* நடிகர் பிரகாஷ்ராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
போலீஸ் கமிஷனர் தயானந்த் கூறுகையில்,’பெங்களூரு உள்பட பிற மாவட்டங்களில் வசிக்கும் இலக்கியவாதிகள், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 61 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்த இந்து அமைப்பு பிரதிநிதி சிவாஜிராவ் ஜாவத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்கள் மூலம் ரூ.854 கோடி மோசடி: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Facebook ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்