×

90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஆடு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்

 

புதுக்கோட்டை,செப்.30: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வெட்டன் விடுதி அருகே உள்ள மின்னம்புஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தையா. இவருக்கு சொந்தமான 90 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த பெரியதம்பி என்பவருக்கு சொந்தமான ஆடு தவறி விழுந்துள்ளது.

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆலங்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் கயிரைக் கட்டி கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்னர் அதை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

The post 90 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஆடு: தீயணைப்பு துறையினர் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Goat ,Pudukottai ,Bethiah ,Minnambunchai village ,Wetan Inn ,Alangudi ,Dinakaran ,
× RELATED ஊராட்சிமன்ற தலைவர் ஏற்பாட்டில்...