×

மலைவாழ் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் வாச்சாத்தி வழக்கு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு

சேத்துப்பட்டு, செப். 30: வாச்சாத்தி வழக்கு ெதாடர்பாக உயர் நீதிமன்றம் 215 பேருக்கு சிறை தண்டனை விதித்தும் 18 பெண்களுக்கு தலா ₹10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் மலைவாழ் மக்கள் சார்பில் நேற்று இரவு சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மலைவாழ் சங்க மாநில குழு உறுப்பினர் பழனி தலைமையில் மலைவாழ் மக்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் மலைவாழ் மக்கள் மாநில பொதுச்செயலாளர் ஐய்யனார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்,

The post மலைவாழ் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் வாச்சாத்தி வழக்கு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு appeared first on Dinakaran.

Tags : High Court ,Vachathi ,
× RELATED லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது