×

மேலூர் சிவன் கோயிலுக்கு அறங்காவலர் குழுவினர் நியமனம் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு

மேலூர், செப். 30: மேலூர் நகரில் மிக பழமையான  கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சியம்மன் கோயிலுக்கு (சிவன் கோயில்) 15 ஆண்டுகளுக்கு பிறகு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில் அறங்காவலர் குழு தலைவராக முல்லைப் பெரியாறு வைகை ஒரு போக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன் அமைச்சர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார்.

குழு உறுப்பினர்களாக மகேந்திரன், விஜயபாண்டியன், கலையரசி ஆகியோரும் பதவி ஏற்றுக்கொண்டனர். உடன் உதவி ஆணையர் செல்வி, செயலர் வாணி மகேஸ்வரி, அர்ச்சகர் தட்சிணாமூர்த்தி, பணியாளர்கள் இருந்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது, ‘‘இக்கோயிலில் தற்போது கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது புதிய அறங்காவலர் குழுவினர் பதவி ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் கோயிலின் வளர்ச்சிக்கு பணியாற்றுவார்கள் ’’ என்றார். புதிதாக அறங்காவலர் குழு தலைவராக பதிவு ஏற்ற தொழிலதிபர் முருகனுக்கு, விவசாய சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

The post மேலூர் சிவன் கோயிலுக்கு அறங்காவலர் குழுவினர் நியமனம் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Board of Trustees ,Melur ,Shiva Temple ,Minister ,P. Murthy ,Kalyana Sundareswarar Kamatsiyamman temple ,Melur city ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...