×

உபியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பிளஸ் 2 மாணவியை தூக்கி வெளியே போட்ட ஊழியர்கள்: வாசலில் பரிதாபமாக உயிரிழப்பு மருத்துவமனைக்கு சீல் வைப்பு

மெயின்புரி: உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டம் கிரோர் நகரில் ராதா ஸ்வாமி மருத்துவமனை உள்ளது. கடந்த செவ்வாய்கிழமை மருத்துவமனைக்கு 12ம் வகுப்பு படித்து வந்த பாரதி (17) என்பவரை கடும் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். 2 நாள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாடியில் உள்ள அறையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் துாக்கி சென்று மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அமர வைத்து விட்டு சென்று உள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி உள்ளன. அதில் மோட்டார் சைக்கிளில் இளம் பெண் உயிரற்ற நிலையில் காணப்படுகிறாள். அவளது முதுகு பின்னோக்கி வளைந்துள்ளது. உறவினராக கருதப்படும் ஒருவர் தாங்கி பிடித்துள்ளார். அந்த பெண் இறந்து விட்டதை அறிந்து பெண் ஒருவர் கதறி அழுகிறார். அப்போது மருத்துமவமனை ஊழியர்கள் யாரும் அருகில் இல்லை. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இது குறித்து இறந்த பெண்ணின் உறவினர்கள் கூறும்போது,‘‘தவறான சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. வேறு ஒரு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யாமல் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளியை வெளியே கொண்டு வந்து போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்’’ என குற்றம் சாட்டினர். உபி துணை முதல்வர்பிரிஜேஷ் பதக் முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையை சீல் வைக்கவும், அதன் உரிமத்தை ரத்து செய்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

The post உபியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பிளஸ் 2 மாணவியை தூக்கி வெளியே போட்ட ஊழியர்கள்: வாசலில் பரிதாபமாக உயிரிழப்பு மருத்துவமனைக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : UP ,Mainpuri ,Radha Swamy Hospital ,Giror, Mainpuri District, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...