×

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: இகாவை தொடரும் தோல்வி

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டேரே பான் பசிபிக் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அங்கு நேற்று நடந்த காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனை போலாந்தின் இகா ஸ்வியாடெக்(22வயது, 2வது ரேங்க்), ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதெர்மேடோவா(26வயது, 19வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் வெரோனிகா 6-2, 2-6, 6-4 என்ற செட்களில் முன்னணி வீராங்கனை ஸ்வியாடெக்கை வீழ்த்தினார். பெரும் வெற்றித் தொடரான யுஎஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் 4வது சுற்றுடன் வெளியேறியதால் இகா நெம்பர் ஒன் இடத்தை இழந்தார்.

அதனால் 500 புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டியில் வெல்வதின் மூலம் ஆண்டு இறுதிக்குள் நெம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இகா தக்க வைக்க முயன்றார். ஆனால் இகாவின் அந்த கனவை வெரோனிகாவின் வெற்றி தகர்த்து விட்டது. வெரோனிகாவை தொடர்ந்து மற்ற காலிறுதி ஆட்டங்களில் வென்ற அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா(29வயது, 4வது ரேங்க்), ரஷ்ய வீராங்கனை அனஸ்டாசியா பவுளிசெங்கோவா(32வயது, 86வது ரேங்க்), கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி(28வயது, 6வது ரேங்க்) ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

The post பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: இகாவை தொடரும் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Pan Pacific Open tennis ,Iga ,Tokyo ,Dare Pan Pacific Open ,Japan ,Dinakaran ,
× RELATED இகா ஸ்வியாடெக் தொடர்ந்து நம்பர் 1: மகளிர் ஒற்றையர் தரவரிசை