×

பாஜகவின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின், எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: பாஜகவின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின், எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக பாஜகவில் இருந்து டெல்லி தலைவர்கள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவரை மாற்றச் சொல்ல எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு என்ன அருகதை இருக்கிறது? எனவும் அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமியை நம்பமுடியாது என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டப்போராட்டமும், புரட்சிப் பயணமும் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பேட்டியளித்துள்ளார்.

The post பாஜகவின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின், எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bajaga ,O.K. Panneerselvam ,Chennai ,Panneerselvam ,Bajaka ,
× RELATED முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனுக்கு...