×

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் சேலம் சரக டிஐஜி விசாரணை..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக கோவைக்கு காரில் தங்கத்தை கொண்டு சென்றபோது வழிமறித்து கொள்ளையடிக்கப்பட்டது. 2 கார்களில் பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், பூலாம்பட்டி மேம்பாலம் அருகே தங்கத்தை கொள்ளையடித்தனர். காரில் விஜயகுமார், ஜெய்சன், சுரேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் தங்கத்தை கொண்டு சென்றபோது கொள்ளையடிக்கப்பட்டது. தங்கம் கொள்ளை தொடர்பாக எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் விசாரணை நடத்திய நிலையில் டிஐஜி ராஜேஸ்வரியும் விசாரணை நடத்தி வருகிறார்.

The post தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் சேலம் சரக டிஐஜி விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Saraka ,Karimangalam, Dharumapuri District ,Dharumapuri ,Salem Saraka ,Rajeswari ,Dinakaran ,
× RELATED சைகை மூலம் பெண்ணை அழைத்தவர் கைது