×

கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் குழந்தை நேய பள்ளி கட்டிடம் திறப்பு

கும்பகோணம், செப். 28: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குழந்தைநேய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, கபிஸ்தலம் பகுதியில் சத்தியமங்கலம், திருமண்டங்குடி, ஆதனூர், துரும்பூர், உம்பளப்பாடி ஆகிய ஊராட்சிகளில் சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 6 குழந்தை நேயப்பள்ளி கட்டிடம், கட்டப்பட்டு, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு தமிழ்நாடு முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், சுதா, பாபநாசம் எம்எல்ஏ உதவியாளர் ரிஃபாய், ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் ராஜேந்திரன், பிரபாகரன், செல்வராஜ், யசோதா சரவணன், சித்திரா மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் ஹாஜா மைதீன், திமுக மாவட்ட பிரதிநிதி முருகேசன், துணை செயலாளர் சரவணன், ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் குழந்தை நேய பள்ளி கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Children ,School Building ,Kapistalam ,Kumbakonam ,Dinakaran ,
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...