×

சிவகிரியில் ரூ.10 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

மொடக்குறிச்சி, செப்.28: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 483 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.50க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.50க்கும், சராசரி விலையாக ரூ.74.50க்கும் ஏலம் போனது. மொத்தம் 15,050 கிலோ எடையுள்ள நிலக்கடலைகாய் ரூ.10 லட்சத்து 81 ஆயிரத்து 577 ரூபாய்க்கு விற்பனையானது.

The post சிவகிரியில் ரூ.10 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Sivagiri ,Modakurichi ,Sivagiri Regulation Hall ,Dinakaran ,
× RELATED சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்