×

சிபிஐ போல போலி நோட்டீஸ் அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகர காவல்துறை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களாக சென்னையில் ஆன்லைனில் ஸ்பீட் கார்னர் என்ற பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்கள் பெயரில் பார்சல் ஒன்று வந்திருப்பதாகவும், அந்த பார்சலில் புலித்தோல்கள், விலை உயர்ந்த நகைகள் மற்றும் சட்டவிரோதமான போதைபொருட்கள் இருப்பதாகவும், மேலும் இது தொடர்பாக மும்பை சைபர் க்ரைம் காவல் அதிகாரிகள் தங்களை விசாரணை செய்ய வேண்டும் என கூறி பாதிக்கப்பட்ட நபர்களை விசாரணை செய்ய தொலைபேசியில் கான்பரன்ஸ் அழைப்பில் இணைத்து விசாரணை மேற்கொள்கின்றனர்.பின்னர், தொலைபேசியை துண்டித்து விடுகின்றனர்.

மேலும், ஸ்கைப் ஆப் மூலமாக தொடர்பு கொண்டு உச்ச நீதிமன்றத்தின் போலியான இணையதள லிங்க்கை அனுப்பி மற்றும் புகார்தாரரின் பெயரில் கைது வாரண்ட் இருப்பதாக கூறி மிரட்டி ஆதாரங்களை பெறுகின்றனர். அதைபயன்படுத்தி பணம் பறிக்கின்றனர். பின்னர், பணத்தை ரிசர்வ் வங்கியால் சரிபார்த்த பிறகு அந்தப் பணத்தை திருப்பித் தருவதாக உறுதியளித்து சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கியின் போலி நோட்டீஸ் அனுப்பி பொதுமக்களை நம்ப வைக்கின்றனர். மேலும், பொதுமக்களும் அதனை உண்மையென நம்பி மோசடி கும்பல் தெரிவிக்கும் வங்கிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்து பணத்தை இழக்கின்றனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், சைபர் கிரைம் உதவி எண் 1930, www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் கிரைம் இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.

The post சிபிஐ போல போலி நோட்டீஸ் அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : CBI ,Police Commissioner ,Sandip Roy ,Rathore ,Chennai ,Chennai City ,Sandip Roy Rathore ,Sandip Rai Rathore ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...