×

ஜீப் காம்பஸ்

ஜீப் இந்தியா நிறுவனம், காம்பஸ் எஸ்யுவி வரிசையில் புதிய பேஸ்லிப்ட் 2 வீல் டிரைவ் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது.இது அதிகபட்சமா் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்மிஷன் உள்ளது. பிளாக் ஷார்க் எடிஷன் ஆக இந்த பேஸ்லிப்ட் எஸ்யுவி வெளிவந்துள்ளது.

பெயருக்கு ஏற்ப அலாய் வீல்கள், கிரில் மற்றும் உட்புறத்தில் பிளாக் தீம் வடிவமைப்பு இடம் பெற்றுள்ளது. இத்துடன் சேர்த்து ஜீப் காம்பஸ் காரில் ஸ்போர்ட் , லாங்கிடியூட், லாங்கிடியூட் பிளஸ், லிமிடெட், பிளாக் ஷார்க் மற்றும் மாடல் எஸ் ஆகிய வேரியண்ட்கள் உள்ளன. 7 வண்ணங்களில் கிடைக்கும்.

The post ஜீப் காம்பஸ் appeared first on Dinakaran.

Tags : Jeep Compass ,Jeep India ,Jeep ,Dinakaran ,
× RELATED அதிவேக பயணத்தால் நொடியில் நடந்த கோர...